April 27, 2024

இந்த ஒரே ஒரு பயத்தால் ..!! விஜய் படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகை ..!! லட்டு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே ..??

தற்போது லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக்  மோகன் ,சினேகா, லைலா ,ஜெயராம் , விடிவி கணேஷ், மீனாட்சி போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ,

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் போல இந்தப்படத்திலும் தங்கை சென்டிமென்ட் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது . அதற்காக விஜய்யின் தங்கையாக நடிப்பதற்கு இளம் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம் .

அவர் வேறு யாருமில்லை இவானா தான் . நாச்சியார் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவானா கடந்த வருடம் வெளியான லவ் டுடே என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார் . இந்நிலையில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு இவானாவுக்கு வந்திருக்கிறது.

ஆனால் தற்போது இவானா தளபதி 68 படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் . காரணம் தளபதி 68 படத்தில் அவருக்கு வாய்ப்பு வந்தது உண்மை தானாம். ஆனால் அது தங்கை ரோல் கிடையாது என்று கூறப்படுகிறது . மேலும் அவர் விலகியதற்கு காரணம் அந்த ரோலில் ,

நடித்தால் இனி வருவதெல்லாம் அதே போன்ற ரோல்கள் தான் வரும் என்ற அச்சத்தால் தான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *