May 2, 2024

நான் மீசையை எடுக்கிறேன்னு சொல்லி இருக்க கூடாது..!! லியோ டிரைலரை பார்த்து ..!! அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்..!! இப்ப என்ன சொல்றார் பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் மீசை ராஜேந்திரன்.  பெரும்பாலும் இவர் பல படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்காது .

அப்படி மட்டும் முறியடித்து விட்டால் என்னுடைய மீசையை நான் எடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன் . இந்த விஷயம் அப்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.  அதோடு இதை பார்த்த விஜய் ரசிகர்களும் கொந்தளித்தனர் .

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் டிரைலரை பார்த்து அண்டர் பல்டி அடித்து இருக்கிறார் மீசை ராஜேந்திரன் . அந்த வகையில் சமீபத்தில் இவர் கூறியதாவது,  என்னுடைய மகன் விஜய்யின் தீவிர ரசிகர் . நான் விஜய் படத்திற்காக விட்ட சவாலை கேட்டு என்னுடைய மகன்,

வருந்தினான்.  அப்போது தான் சினிமாவில் யாரையும் எப்போதும் ஒப்பிட்டு பேசக்கூடாது என்று நினைத்தேன்.  அது மட்டுமில்லாமல் நான் மீசையை எடுக்கிறேன் என்று சொல்லி இருக்கக் கூடாது என்று அந்த பல்டி அடித்திருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்.  மேலும் லியோ படத்தின்,

டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . இதனால்  கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என்றும் இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றும் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *