April 25, 2024

இதுவரை பலரும் பார்த்திராத இயக்குனர் மணிரத்னம் – சுஹாசினியின் திருமண புகைப்படங்கள் இதோ ..!!

இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம் . எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான பல்லவி அணு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி இவர் இயக்கிய முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம் ,நாயகன், அக்னி நட்சத்திரம்,

அஞ்சலி, தளபதி, ரோஜா ,பம்பாய் ,உயிரே ,அலைபாயுதே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இவருடைய படங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல்,

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு கடந்த வருடம் இவர் இயக்கிய பொன்னின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதைத் தொடர்ந்து தற்போது,

உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கிக்கொண்டு வருகிறார் இயக்குனர் மணிரத்னம் . இதனிடையே கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் மணிரத்னம் . திருமணமான இவர்களுக்கு,

ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத இயக்குனர் மணிரத்னம்- சுஹாசினியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *