கனவுக்கன்னி வாய்ப்பை நழுவ விட்டு ..?? சினிமாவும் வேணா ஒன்னும் வேணா ஓடிய நடிகைகள் ..?? சினிமா சவகாசம் வேண்டாம் என கமுக்கமாக இருக்கும் நடிகை ..!!
பொதுவாக சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாகி விடுவார்கள். அதே சமயம் அவர்கள் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பார்கள். இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். அப்படி கனவுக்கன்னி வாய்ப்பை நழுவ விட்ட நடிகைகள் .
அசின் இவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர். பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போது இந்தி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கே நடிக்கப் போய்விட்டார். பிறகு பாலிவுட்டுக்கு சென்று முன்னணியாக நடிகையாக இருக்கும் போது ஒரு மொபைல் கம்பெனி ஓனரை திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டில் ஆகிவிட்டார்.
ஜெனிலியா இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்து வந்தார். இவருடைய துருதுரு நடிப்பும், துள்ளலான பேச்சுக்கும் இன்றும் இவருடைய வருகைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே பாலிவுட் நடிகர் ரித்திஸை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
ஷாலினி இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். மிகப் பெரிய வெற்றி படங்களாக மாறி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அஜிதை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
மீரா ஜாஸ்மின் இவர் தமிழில் ரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். தொடர்ந்து 50 படங்களுக்கு மேல் நடித்த இவர் ஒரு கனவு கன்னியாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் தொழிலதிபர் மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நஸ்ரியா இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு தமிழில் ராஜா ராணி, நையாண்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மிகச்சிறு வயதிலேயே மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.