May 7, 2024

மகளுக்கு முருகர் வேடம் , தனக்கு பார்வதி வேடம்..!! தைப்பூச தினத்தில் ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளினி தியா மேனன்..!!

தியா மேனன் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் வி ஜே ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து தொகுப்பாளினி வாழ்க்கையை தொடங்கிய தியா மேனன் இதுவரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.  மேலும் இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இடம் பெற்ற கிரேசி கண்மணி ,சுட சுட சென்னை ,கால் மேல காசு போன்ற பல நிகழ்ச்சிகளை ,

தொகுத்து வழங்கி இருக்கிறார். குறிப்பாக ரசிகர்கள் இவரை “கிரேசி கண்மணி”  என்று அன்போடு அழைப்பார்கள் . அதோடு சூப்பர் சேலஞ்ச், வணக்கம் தமிழா, சவாலே சமாளி போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் தியா மேனன் .

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தியா மேனன்.  திருமணமான இவர்களுக்கு கடந்த 2022  ஆம் வருடம் அழகான பெண் குழந்தை பிறந்தது . இப்படி இருக்கும் நிலையில் இன்று தைப்பூச தினத்தை ,

முன்னிட்டு தன்னுடைய மகளுக்கு முருகர் வேடமும் , தனக்கு பார்வதி வேடமும் போட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் தியா மேனன். தற்போது அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *