April 25, 2024

பாபா படம் தான் ஓடல ..!! இந்த படம் கண்டுப்பா ஓடும் ..!! 28 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டாரின் படம் ..!! கொண்டாடத்தில் ரஜினி ரசிகர்கள் ..!!

சமீப காலமாக தமிழ் பிரபலங்களின் பழைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வருகிறது . அந்த வகையில் ரஜினியின் பாபா,  கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆனது.  குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது . ஆனால் ரீ ரிலீசான பாபா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் பாபா படம் தான் ஓடல , கண்டிப்பாக இந்த திரைப்படம் ஓடும் என்று சொல்லும் வகையில் இன்னொரு சூப்பர் ஸ்டாரின் படம் ரீ ரிலீஸ் ஆகிறதாம் . அந்தத் திரைப்படம் தான் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் . இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ,

இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்  அப்பா,  மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் .  அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் மீனா ,சரத் பாபு ,ராதாரவி ,செந்தில், வடிவேலு ,ஜெயபாரதி ,சுபஸ்ரீ, பொன்னம்பலம், விசித்ரா, ரகுவரன்,

போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்நிலையில் இந்த படம் வெளியாகி,

கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆன நிலையில் , இந்தத் திரைப்படம் இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆவதாக முத்துப் படத்தை தயாரித்த கவிதாலயா ப்ரோடுக்ஷன்ஸ் அறிவித்துள்ளது . இந்த தகவல் தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *