May 8, 2024

இவர் நடிக்க வந்தா மத்த நடிகைகள் எல்லாம் காலி ..!! வைரலாகும் நடிகர் சாந்தனு மனைவியின் புகைப்படங்கள் ..!!

நடிகரும்,  இயக்குனருமான பாக்யராஜின் மகன் தான் சாந்தனு.  கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சாந்தனு . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சித்து பிளஸ் 2 ,ஆயிரம் விளக்கு ,அம்மாவின் கைப்பேசி, வாய்மை ,முப்பரிமாணம் , வானம் கொட்டட்டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

ஆனால் இத்தனை படங்களில் நடித்தும் இவரால் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை . அப்படி இருந்தும் தற்போது விடா முயற்சியை  விடாமல் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சாந்தனு . இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு ,

பிரபல தொகுப்பாளினியான கிகி விஜய் என்று அழைக்கப்படும் கீர்த்தி என்பவரை  திருமணம் செய்து கொண்டார் நடிகர் சாந்தனு .  கிகி விஜய் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில்  சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்டிவாக  இருந்து வரும் சாந்தனு மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் இவர் நடிக்க வந்தா மத்த நடிகைகள் எல்லாம் காலி என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *