April 28, 2024

இனிமேல் எவனும் அஜித்தை கிண்டல் பண்ண முடியாது..!! 15 கிலோ எடை குறைத்த அஜித் ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது கொடுத்து வருகின்றனர் முன்னணி நடிகர்கள் . ஆனால் அஜித் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் கொடுப்பதே பெரிய விஷயமாக கருதப்படுகிறது . மேலும் துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் கூட இன்னும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகவில்லை . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு,

தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் ,திரிஷா, ரெஜினா , ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை  . இந்நிலையில் சமீப காலமாகவே அஜித் மிகவும் உடல் எடை அதிகமாக இருக்கிறார் என்று அவருடைய ,

ரசிகர்களே பெரிய அளவில் கவலை பட்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் விடா முயற்சி படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோ எடையை குறைத்து பழைய அஜித்தாக மாறி இருக்கிறார் . தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .

இதைப் பார்த்த ரசிகர்கள் இனிமேல் எவனும் அஜித்தை கிண்டல் பண்ண முடியாது என்று கூறி வருகின்றனர் . இதோ அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *