May 3, 2024

72 வய துக் கே தடுமா றும் ரஜி னி ..!! 86 வய து வ ரை நடி த்து உ யிரை விட் ட நடி க ர் ..!! இவரெல் லா ம் உ ங்க கண் ணுக்கு தெரி யலை யா ..?? கேள்வி யெழு ப்பிய பிர பல ம் ..!!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை கலக்கி வரும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.  இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் 72 வயதான சூப்பர் ஸ்டார் இப்போதும் கெத்தாக நடிக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

ஆனால் இவ்வளவு வயதாகி விட்டதால் இனி நடிக்க முடியாது என்று சினிமாவை விட்டு சூப்பர் ஸ்டார் விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இன்னும் சொல்ல போனால் இன்னும் இரண்டு திரைப்படம் தான் நடிப்பார் என்றும் தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் எப்போதும் எல்லா நடிகர்களையும் ,

வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன் ரஜினியையும் சீண்டி உள்ளார் . அந்த வகையில் 72 வயதுக்கே  ரஜினி தடுமாறுகிறார்,  ஆனால் 86 வயது வரை ஒரு நடிகர் அசத்தியிருக்கிறார் என்று பிரபல நடிகர் ஒருவரை குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.  அவர் வேறு யாருமில்லை,

மறைந்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தான்.  கடந்த 1940 ஆம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான காக்கா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து  மங்கையர்க்கரசி ,மனோகரா ,தேவர்மகன்,  காதலுக்கு மரியாதை ,பூவெல்லாம் கேட்டுப்பார், வசூல் ராஜா எம் பி பி எஸ்,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . கடைசியாக என் உயிரினும் மேலான என்ற படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் காக்கா ராதாகிருஷ்ணன்.  தற்போது அவரை குறிப்பிட்டு ரஜனியை வம்புக்கு இழுத்திருக்கிறார்  ப்ளூ சட்டை மாறன்.  இதோ அவர் வெளியிட்ட பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *