April 27, 2024

சரவெடியாக வந்த புதிய ஆதி குணசேகரன் ..!! இனிமேலாவது திரை தீ பிடிக்குமா ..?? வெளியானது எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ ..!!

கடந்த வருடத்திலிருந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல்.  இயக்குனர் திருசெல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மதுமிதா ,கனிகா ,பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ,மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ்,சத்யபிரியா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வந்தனர்.  இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே ,

டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது . அதற்கு காரணமாக அமைந்தது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாரிமுத்து தான் . இவருக்காகவே இந்த சீரியல்  தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகியது . ஆனால் நடிகர் மாரிமுத்துவின் ,

இறப்பிற்கு பிறகு இந்த சீரியல் டிஆர்பியில்  அப்படியே பின் தங்கியது . இதனால் அடுத்த ஆதி குணசேகரனை போடுவதற்கு எதிர்நீச்சல் சீரியல் குழு தவித்து வந்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் ஒரு வழியாக அடுத்த ஆதி குணசேகரனை சீரியலில் களம் இறக்கி உள்ளனர் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் வேல ராமமூர்த்தி தான் . நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . ஆனால் சீரியலில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிய வேலராமமூர்த்தி தற்போது ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் கமிட்டாகி உள்ளாராம்.

தற்போது அந்த சீரியலின் ப்ரோமோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இனிமேலாவது இந்த சீரியல் திரை தீ பிடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *