April 24, 2024

விரைவில் ஹீரோயின் ஆகப்போகும் வனிதா மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ ..!!

மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார் . கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வனிதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,நான் ராஜாவாகப் போகிறேன், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், அநீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  பிக் பாஸில் கலந்து கொண்டு சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் மூன்று திருமணம் செய்து கொண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பினார் நடிகை வனிதா.

மேலும் வனிதாவுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர்.  இதில் வனிதாவின் மூத்த மகளான ஜோதிகா விரைவில் கதாநாயகி அவதாரம் எடுக்க உள்ளாராம் . தற்போது அவரைத் தேடி நல்ல நல்ல கதைகள் வருகிறதாம்.  இது குறித்த அறிவிப்பு விரைவில் ,

வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கதாநாயகி கலை வந்துவிட்டது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *