April 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அமெரிக்காவுக்கே சென்ற குஷ்பூ , மீனா ..!! தடபுடலாக விருந்து வைத்து அசத்திய நெப்போலியன்..!!

நெப்போலியன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் நெப்போலியன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ஊர் மரியாதை, தலைவாசல், எஜமான் ,கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தாயகம் ,

எட்டுப்பட்டி ராசா ,கிழக்கும் மேற்கும், சுயம்வரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் நெப்போலியன் .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த நெப்போலியன் தற்போது ஜீவன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் . இதனால் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்  நடிகர் நெப்போலியன்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் 60-வது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் நெப்போலியன்.  அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் மீனா மற்றும் குஷ்பூ அமெரிக்காவுக்கே சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர் . அப்போது மீனா,  குஷ்பூ இருவருக்கும்,

தடபுடலாக விருந்து வைத்து அசத்தியிருக்கிறார்  நடிகர் நெப்போலியன் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *