April 28, 2024

நாம ஜெயிச்சிட்டோம் மாறா ..!! நெல்சனை தொடர்ந்து பிரபல இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட விலையுர்ந்த கார் ..!! 8 வருடம் கழித்து சாதித்த இயக்குனர் ..!!

ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்தப் படத்தின் இயக்குனருக்கு கார் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் . இது பல காலமாக கடைப்பிடித்து வந்தாலும் சமீப காலமாக பல இயக்குனர்கள் புதிய கார்களை பரிசாக வாங்கி கொண்டு இருக்கின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்திற்காக விலை உயர்ந்த காரை பரிசாக வாங்கினார் இயக்குனர் நெல்சன்.  இவரை தொடர்ந்து இன்னொரு இயக்குனரும்,

விலை உயர்ந்த காரை பரிசாக வாங்கி இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன் . பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,  பஹீரா போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் . ஆனால் இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களுமே அந்த மாதிரி படங்கள் என்பதால் இவரும் அந்த மாதிரி இயக்குனர் என்றே முத்திரை குத்தப்பட்டார் . இந்நிலையில் சமீபத்தில்,

விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கியிருந்தார் ஆதிக்  ரவிச்சந்திரன்.  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.  இன்னும் சொல்லப்போனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய,

படங்களிலேயே இந்த திரைப்படம் தான் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலை உயர்ந்த பி எம் டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Adhik Ravichandran (@adhikravi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *