April 28, 2024

புஷ்பா 2 வில் சமந்தா இல்லையா ..?? அப்ப ஐட்டம் டான்ஸ் ஆடப்போவது இந்த நடிகை தானா ..?? சோகத்தில் சமந்தா ரசிகர்கள் ..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா.  இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன்  இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், மைம் கோபி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ,

சமந்தாவின் நடனம் தான்.  அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற “ஓ சொல்றியா மாமா சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை சமந்தா.  மேலும் இந்த படத்திற்காக அப்பவே சமந்தா ஐந்து கோடி சம்பளமாக,

வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை அடுத்து தற்போது புஷ்பா 2 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.  ஆனால் இந்த படத்தில் சமந்தாவுக்கு டாட்டா காட்டிவிட்டு 22 வயது நடிகைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் புஷ்பா 2  படக்குழுவினர்.

அவர் வேறு யாருமில்லை இளம் நடிகையான ஸ்ரீ லீலா தான்.  தெலுங்கு படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஸ்ரீ லீலா தான் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக இந்த படத்திற்காக இவருக்கு இரண்டு கோடி சம்பளம் ,

பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இவர் சமந்தா அளவிற்கு பிரபலமவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *