April 29, 2024

நய ன்தாரா அதை கற்றுக் கொ ண்டார் ..!! ஜா க்கிர தையாக இரு க்கு ங்கள் ..!! விக் னேஷ் சி வ னை எச் சரி த்த ஷாரு க்கா ன் ..!! என் ன கார ணம் தெ ரியு மா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா.  தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.  அப்படி தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று பல  மொழி படங்களில் கலக்கி கொண்டு வந்த நயன்தாரா தற்போது ஹிந்தியில் ,

என்ட்ரி கொடுத்துள்ளார் . அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜவான் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.  மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .  அதிலும் நயன்தாரா இந்த படத்தில் பில்லா படத்தில் நடித்திருந்தது போல துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும்,

வகையில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் ஷாருக்கான்.  அதில் அவர் கூறியதாவது,  நயன்தாரா மிகவும் அருமையானவர்,  ஆனால் ஒரு கணவராக நீங்கள் ( விக்னேஷ் சிவனை )ஜாக்கிரதையாக இருங்கள்,  அவர் பெரிய அடி உதைகளை கற்றுக் கொண்டுள்ளார் என்று,

பதிவிட்டுள்ளார் நடிகர்  ஷாருக் கான் .  இதைப் பார்த்த விக்னேஷ் சிவன், நான் ஜாக்கிரதியாக இருக்கிறேன் , அதே நேரத்தில் அவர் ஒரு காதல் மன்னனிடம் நல்ல ரொமான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறார் என்றும் பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *