April 25, 2024

நடி ப்பின் நா யக ன் சூர்யா வின் சிறு வயது புகை ப்படங் கள் உ ள் ளே ..!!

சூர்யா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . மூத்த நடிகரான சிவகுமாரின் மகனான சூர்யா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மோசமான வரவேற்பையே பெற்றுத் தந்தது.  இதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நந்தா திரைப்படம் தான் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே ,காக்க காக்க, பிதாமகன் ,பேரழகன், கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல் என்று தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது . இதன் பிறகுதான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் சூர்யா .இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் சூர்யா . திருமணமான இ வர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர்.  மேலும் நடிகராக கலக்கி கொண்டு வந்த சூர்யா 36 வயதினிலே, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், உறியடி 2 ,பொன்மகள் வந்தாள்,ஜெய் பீம் போன்ற பல திரைப்படங்களை,

தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிப்பின் நாயகன் சூர்யாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *