April 27, 2024

அருந்ததி வெளியாகி 15 வருஷம் ஆகிருச்சா ..?? புகைப்படங்களை வெளியிட்டு நன்றி சொல்லிய அனுஷ்கா ..!! இந்த படத்தை மறக்க முடியுமா ..??

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அருந்ததி.  இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து சோனு சூட், ரகுபாபு , சயாஜி , மனோரமா, திவ்யா நாகேஷ்  போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது .

இன்னும் சொல்லப்போனால் அனுஷ்காவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு பிறகு தான் அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது .  குறிப்பாக இந்த படத்தை இப்போது பார்த்தால் கூட ,

பயமாகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு காலங்கள் கடந்தும் பேசப்பட்டு வருகிறது அருந்ததி திரைப்படம்.  மேலும் இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டதாம் . அதைக் கொண்டாடும் விதமாக அனுஷ்கா அருந்ததி படத்தின் புகைப்படங்களை,

பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் அருந்ததி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யுங்கள் என்று  அனுஷ்காவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *