April 29, 2024

ரசிகர் க ளை மயக் கும் நடிக ர் அர்ஜு ன் மக ளின் லேட் டஸ்ட் பு கைப்பட ங் கள் ..!!

அர்ஜுன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 1984 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் அர்ஜுன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து யார் ,சங்கர் குரு ,தாய் மேல் ஆணை ,ஜென்டில்மேன் ,

ஜெய்ஹிந்த் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகர் அர்ஜுன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் இவர் சேவகன் ,ஜெய்ஹிந்த் ,தாயின் மணிக்கொடி ,வேதம் ,ஏழுமலை திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் நடிகர் அர்ஜுன்.  இதனிடையே நிவேதிதா என்ற நடிகை யை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் அர்ஜுன் . திருமணமான ,

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . ஆனால்  இந்த படம் இவருக்கு பெரியளவில் வரவேற்பை பெற்று தரவில்லை . அதன் பிறகு எந்த ஒரு படங்களிலும்,

நடிக்கவில்லை  ஐஸ்வர்யா . அப்படி மார்க்கெட் இல்லை என்றாலும் இணையத்தில் ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் நடிகர் அர்ஜுனின் மகள் .  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *