April 27, 2024

யார் ஜெயித்தாலும் நான் இதை செய்வேன் ..!! சொன்னதை செய்துகாட்டிய பிக்பாஸ் விஷ்ணு ..!! ஆனந்தக்கண்ணீரில் அர்ச்சனா ..!!

விஷ்ணு விஜய் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற சீரியல் மூலம் அறிமுகமான விஷ்ணு ஆபிஸ்,  சத்யா போன்ற சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். குறிப்பாக இவருக்கென்று ஒரு  தனி ரசிகர் பட்டாளமே உள்ளது . இதன் பிறகு தமிழில் வெளியான மாப்பிள்ளை சிங்கம் ,இவன் யாரென்று தெரிகிறதா ,களரி ,

கொரில்லா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் விஷ்ணு . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் விஷ்ணு . மேலும் ஆரம்பத்தில் இருந்து இவர் ரசிகர்களை கவரும் போட்டியாளராக ,

இருந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இவரும் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்கள் கணித்து வைத்திருந்தனர் . ஆனால் கடைசி நேரத்தில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிவிட்டார் விஷ்ணு . ஆனால் பிக் பாஸ் வீட்டில் ,

இருக்கும்போது உங்களில் யார் ஜெயித்தாலும் நான் கண்டிப்பாக ஆயிரம் வாலா வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியிருந்தார் விஷ்ணு . இந்நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருந்ததை கொண்டாடும் விதமாக ஆயிரம் வாலா சரவெடி ,

வைத்து வெடிக்கும் விஷ்ணுவின் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் சொன்னபடியே செய்து விட்டாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *