May 6, 2024

ஏலியன் மற்றும் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய சிவகார்த்திகேயன் ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் சிவகார்த்திகேயன் .

குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே குடும்பக் கதைக்களங்களை தேர்வு செய்து குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைத்துவிட்டார் சிவகார்த்திகேயன் . இதனாலேயே  இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் குடும்பங்களுக்கு கொண்டாடும் வெற்றி படமாக ,

அமைந்து வருகிறது.  மேலும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ,

வெளியான திரைப்படம் தான் அயலான் . ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ஏலியன்  மற்றும் குடும்பத்துடன்,

கொண்டாடி இருக்கிறார் சிவகார்த்திகேயன் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த  புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *