May 3, 2024

69 வயதாகியும் சினிமா வெறி அடங்கலையா ..?? ஷங்கர் , மணிரத்னம், எச் வினோத் என்று ..!! 10 பத்து வருடத்திற்கு கால்சீட் கொடுத்த கமல் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிறவி கலைஞன் என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் தான்.  அப்படி தன்னுடைய ஐந்து வயதிலேயே திரையில் நடிக்க ஆரம்பித்த கமல்ஹாசன் கிட்டத்தட்ட 69 வயதாகியும் கூட அதை நிறுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,

இயக்கத்தில் வெளியா விக்ரம் படத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட் அப்படியே உச்சத்தை தொட்டது . இதன் பிறகு இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 , இந்தியன் 3 . இயக்குனர் நாக அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி , இயக்குனர் எச் வினோத்,

இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் , இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் , இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம்  2 , ஸ்டண்ட் கலைஞர்கள் அன்பறிவு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் என்று இன்னும் பத்து வருடத்திற்கு,

தேவையான கதைகளை இப்போதே தேர்வு செய்து வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.  தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் 69 வயதாகியும் சினிமா வெறி இவருக்கு அடங்கலையே என்று பலரும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *