April 25, 2024

உனக்கு வெட்கமா இல்லையா ..?? இப்படி நடித்ததற்கு ..?? விஜய் பட நடிகையை கிழி கிழின்னு கிழித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ..!!

ராஷ்மிகா மந்தனா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கன்னட படத்தின் மூலம் தமிழ் திரைப்பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் . குறிப்பாக இந்த படத்திற்கு பிறகு தான் இவர் ரசிகர்களின் பேவரைட்  நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதன் பிறகு நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்த ராஷ்மிகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் வலம்  வந்தார் . இதன் பிறகு தான் ரசிகர்களுக்கு இவரை பிடிக்காமல் போனது . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் ,

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்களை மிகவும் மோசமாக காட்டி இருந்தனர் . அதோடு ராஷ்மிகா எப்படி இப்படி ஒரு மோசமான படத்தில் நடித்தார் என்று ரசிகர்களே கேள்வி எழுப்பினர் .

இப்படி இருக்கும் நிலையில் அனிமல் படத்தை பார்த்த நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது ,இந்த திரைப்படம் வக்கிரத்தின் உச்சகட்டம் ,இந்த மாதிரியான ஆணாதிக்கம் நிறைந்த படங்களை எடுப்பதால் சமூகத்தில் சீர்கேடுகள் அதிகரிக்கும் .

இப்படிப்பட்ட ஒரு மோசமான படத்தில் ராஷ்மிகா நடித்திருக்கவே கூடாது,  அனிமல் படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களே இப்படி இருக்கும் போது அதை இயக்கிய இயக்குனர் மனதில் எவ்வளவு ஆணாதிக்கம் இருந்திருக்கும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *