May 1, 2024

மொக் கை வா ங்கி ய பா பா ..!! ரீ ரிலீ ஸில் மா ஸ் காட் டும் வேட் டையா டு வி ளை யாடு..!! 25 நாட் களி ல் இத் தனை கோ டி வ சூ லா..?? மீண் டும் உல கநா யகன் எ ன்று நிரு பித்த க மல் ..!!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  பாபா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள்.  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் மொக்கை வாங்கியது தான் மிச்சம்.  இவரைத் தொடர்ந்து கமல்ஹாசனும் தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தை ரீ ரிலீஸ் செய்தார்.  அந்த திரைப்படம் தான் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்,

இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன் ,ஜோதிகா ,கமலினி முகர்ஜி ,பிரகாஷ்ராஜ் ,டேனியல் பாலாஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டியது. இப்படி இருக்கும் நிலையில் ,

இந்த திரைப்படம் வெளியாகி  கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள்.  அப்படி ரீ ரிலீஸான வேட்டையாடு விளையாடு திரைப்படம் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறதாம்.  மேலும் இந்தத் திரைப்படம் ,

இதுவரை ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். மேலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலேயே வேட்டையாடு விளையாடு திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்றதாம்.  இந்த விஷயத்தை கொண்டாடும் விதமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்,

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் , இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள் . இதனால் விரைவில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம்  உருவாகலாம் என்று இயக்குனர் கெளதம் தரப்பில் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *