April 28, 2024

சிவகார்த்திகேயனின் 5 வருட கனவு பலிச்சிருச்சு ..!! அயலான் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா ..??

நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான்.  இன்று நேற்று நாளை என்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குனர் ரவிக்குமார் இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் இணைந்தார்.  இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஈஷா கோபிகர் ,வெங்கட் செங்குட்டவன் ,பானுப்பிரியா, ரகுல் ப்ரீத்தி சிங்,

யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் , முனீஸ் காந்த் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் . கே ஜே ஆர் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .

ஆனால் ஐந்து வருடம் கழித்து தான் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.  குறிப்பாக இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருந்ததாலும் , பணப் பிரச்சனையாலும் இந்த திரைப்படம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் நேற்று வெளியான,

இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முதல் நாளில் 9 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக,

தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இனிவரும் நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக அயலான் திரைப்படம் 100 கோடியை தாண்டும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *