April 28, 2024

ஜெயிலரிடம் மண்ணை கவ்விய லியோ ..!! இனி தலைகிழாக நின்னாலும் அது நடக்காது ..!! வெளிவந்த 18 வது நாள் வசூல் விபரம் ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில உருவான லியோ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.  குறிப்பாக இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி தான் திரையரங்குகளில் வெளியானது.  அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட நடக்கவில்லை . அப்படி எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் கூட இந்த திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் . இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர் . அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது.

இதனால் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை லியோ திரைப்படம் முறியடித்து விடும் என்று கணிக்கப்பட்டது.  ஆனால் ஆரம்பத்தில் வசூலில் சக்கை போடு போட்ட லியோ திரைப்படம் நாளாக நாளாக வசூலில் மந்தம் ஆகிவிட்டது . அந்த வகையில் தற்போது வரை,

உலக அளவில் 570 கோடி மட்டுமே லியோ திரைப்படம் வசூலித்துள்ளது. இன்னும் லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தை முறியடிக்க வேண்டுமானால் 55 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும்.  ஆனால் இன்னும் நான்கு நாட்களில் தீபாவளியை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள்,

வெளியாக உள்ளதால் லியோ படத்தின் வசூல் நன்றாகவே பாதிக்கும் என்று கூறப்படுகிறது .இதனால் லியோ திரைப்படம் ஜெயிலரை மிந்த வாய்ப்பே இல்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *