May 5, 2024

விவேக் முதல் விஜயகாந்த் வரை ..!! இத்தனை நடிகர்களின் இறப்பில் கலந்துக்கொள்ளாத வடிவேலு ..!! ரசிகர்கள் திட்டுவதில் தப்பேயில்லை ..!!

கேப்டன் விஜயகாந்த் இறந்ததிலிருந்து ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் நடிகர் என்றால் அது காமெடி நடிகர் வடிவேலு தான்.  தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வந்தார் வடிவேலு . அப்போது தேவையில்லாமல் கேப்டன் விஜயகாந்தை பற்றி தவறாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் வடிவேலு .  மேலும் ராஜ்கிரணால்  அறிமுகம் செய்யப்பட்ட ,

வடிவேலுவை தூக்கிவிட்டு அழகு பார்த்தார் விஜயகாந்த் . ஆனால் அந்த நன்றியை கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்க்கவில்லை வடிவேலு . மேலும் என்னதான் விஜயகாந்த் மீது பகை இருந்தாலும் அவருடைய இறப்பிற்கு வடிவேலு வராமல் இருந்தது தான் பெரும் சர்ச்சையை,

கிளப்பியுள்ளது . மேலும் இவர் கேப்டன் இறப்பிற்கு மட்டுமல்ல இத்தனை நடிகர்களின் இறப்பிற்கும் வரவில்லையாம் . அந்த வகையில் தவிர்க்க முடியாத காமெடி நடிகரான விவேக் அவர்களின் இறப்பில் கலந்து கொள்ளவில்லை வடிவேலு . இவரை தொடர்ந்து காமெடி நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ,

கஜேந்திரன் ,அல்வா வாசு, போண்டாமணி உட்பட பல பிரபலங்களின் இறப்பில் கலந்து கொள்ளவில்லை வடிவேலு.  இதற்கும் இவர்கள் எல்லாம் வடிவேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவார்கள்.  இந்த காரணத்தினால் தான் வடிவேலுவை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வெறுத்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *