April 30, 2024

சிரிப்பாலேயே ரசிகர்களை கவர்ந்த ..!! நடிகர் மதன் பாப்பின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

மதன் பாப் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார்.  கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் மதன் பாப் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தேவர் மகன் ,உழைப்பாளி ,திருடா திருடா ,மகளிர் மட்டும்,நம்மவர், சதிலீலாவதி, சுந்தர புருஷன், ரட்சகன், பிரியமுடன் போன்ற திரைப்படங்களில் ,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மதன் பாப் . குறிப்பாக இவர் காமெடி வேடத்தில் நடித்திருந்த பிரண்ட்ஸ், பிரியமான தோழி ,கண்ணுக்குள் நிலவு, சந்திரமுகி போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருந்து வருகிறது .

இப்படி படங்களில் கலக்கிக் கொண்டு வந்த நடிகர் மதன் பாப் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சுசிலா என்பவரை திருமணம் செய்து கொண்ட,

நடிகர் மதன் பாப்பிற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . குறிப்பாக சிரிப்பாலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகர் மதன் பாப்பின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *