May 7, 2024

பேருக்கு தான் 600 கோடி வசூல் ..!! ஆனா இன்னும் சம்பளமே கொடுக்கல ..!! புலம்பும் லியோ படத்தின் உதவி இயக்குனர்கள் ..!!

கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத் ,அர்ஜுன், திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,மடோனா செபாஸ்டின் ,ஜார்ஜ் மரியான் ,மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர்,பிரியா ஆனந்த் ,மேத்யூ தாமஸ் போன்ற பல பிரபலங்கள்  நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம்,

பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது மட்டுமல்லாமல்  இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . ஆனால் 600 கோடி வசூல் செய்தும் உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லையாம் . அந்த வகையில் லியோ படம் வெளியாவதற்கு முந்தைய மாதமான செப்டம்பர் மாதத்தில் ,

லோகேஷின் உதவி இயக்குனர்கள் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் பிஸியாக இருந்தார்களாம்.  ஆனால் அந்த மாதத்திற்கான சம்பளத்தை தயாரிப்பாளர் இப்போது வரை கொடுக்கவில்லையாம்.  இதனால் உதவி இயக்குனர்கள் தற்போது புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *