April 23, 2024

அர்ச்சனாவும் இல்லை , மாயாவும் இல்லை ..!! பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான் ..!! முடிவு பண்ணிய ரசிகர்கள் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . அந்த வகையில் நூறாவது நாளை கடந்துள்ள பிக் பாஸ் வீட்டில் மாயா ,அர்ச்சனா, மணி ,விஷ்ணு, தினேஷ் போன்ற போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.  மேலும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று பலரும் கூறி வருகின்றனர் . இன்னொரு பக்கம் மாயா வருவதற்கும் வாய்ப்புள்ளதாக,

கூறப்படுகிறது . அதோடு ஆரம்பத்தில் இருந்தே மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக பல்வேறு சதிவேலைகள் நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் .  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 7 ன் டைட்டில் வின்னர் மாயாவும் இல்லை , அர்ச்சனாவும் இல்லை ,

இவர் தான் என்று முடிவெடுத்துள்ளனர் ரசிகர்கள் . அவர் வேறு யாருமில்லை நடிகர்  பிரதீப் ஆண்டனி தான்.  தமிழில் வெளியான அருவி , வாழ் ,டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரதீப் பிக் பாஸ் செவனில் போட்டியாளராக கலந்து கொண்டார் .

குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது பிரதீப் மட்டும்தான் . ஆனால் அவரை தேவையில்லாத காரணத்தை சொல்லி வெளியேற்றி இருந்தார்கள் . அந்த நேரத்தில் ரசிகர்கள் கமலையும் பிக்பாஸையும் கழுவி கழுவி ,

ஊத்தினார்கள் . அப்படி அவர் வெளியேறிய பிறகும் கூட அவருக்கு தான் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர் . மேலும் பிரதீப் மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *