May 1, 2024

இந்த ஜோடிக்கு என்ன குறைச்சல் ..?? மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக்  புகைப்படங்களை பகிர்ந்த அசோக் செல்வன் ..!!

அசோக் செல்வன் ஓர் வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகர் அறிமுகமானார் அசோக் செல்வன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி ,கூட்டத்தில் ஒருத்தன் , ஓ மை கடவுளே ,சில நேரங்களில் சில மனிதர்கள் ,நித்தம் ஒரு வானம் என்று தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை ,

தேர்வு செய்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

இதனிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் அசோக் செல்வன்.  பின்னர் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் .

மேலும் இவர்களுக்கு திருமணமான போது பலரும் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை பார்த்து விமர்சித்து இருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் அசோக் செல்வனும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியனும் எடுத்துக்கொண்ட  ரொமாண்டிக்  புகைப்படங்கள்,

இணையத்தில் பகிர்ந்துள்ளனர் . இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு என்னயா குறைச்சல் என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *