April 26, 2024

அப்பவே 300 கோடி சொத்து ..!! தமிழ் சினிமாவின் முதல் பணக்காரர் இவர் தானா ..?? எம் ஜி ஆர் , சிவாஜி கூட கிடையாது ..!!

தற்போதுள்ள காலகட்டத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களின் சொத்து மதிப்பு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது . குறிப்பாக ரஜினி ,கமல், விஜய் போன்ற நடிகர்கள் 400 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர்.  ஆனால் இது இன்றைய காலகட்டத்தில் ஒரு சர்வ சாதாரணமான விஷயம் தான் . ஆனால் அந்த காலத்திலேயே 300 கோடி சொத்து வைத்திருக்கிறார் ஒரு பிரபலம் ஒருவர் .

இன்னும் சொல்லப்போனால் அவர் தான் தமிழ் சினிமாவிலேயே முதல் கோடீஸ்வரர் . அவர் வேறு யாருமில்லை ஜெமினி ஸ்டுடியோவின் நிறுவனரும் , இயக்குனருமான எஸ் எஸ் வாசன் தான் . தயாரிப்பாளராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த எஸ் எஸ் வாசன்,

கடந்த 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற படத்தை இயக்கி தயாரித்திருந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலேயே அதிக பொருட்செலவில்  உருவான ஒரே திரைப்படம் இந்த சந்திரலேகா திரைப்படம் தான் . அந்த வகையில் இந்தப் படத்திற்காக 30 லட்சம் செலவு,

செய்திருக்கிறார் எஸ் எஸ் வாசன் அவர்கள்.  இன்றைய மதிப்பின்படி பார்த்தால் 300 கோடி . மேலும் தன்னுடைய சொத்தை எல்லாம் அடமானம் வைத்து தான் இந்த படத்தை மூன்று வருடங்களாக எடுத்திருக்கிறார் எஸ் எஸ் வாசன்.  ஆனால் அவர் நினைத்ததை விடவே இந்த திரைப்படம்,

பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.  இன்னும் சொல்லப்போனால் இந்திய சினிமாவே  இந்த தமிழ் திரைப்படத்தை வியந்து பார்த்தது . அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் செய்திருந்தார் எஸ் எஸ் வாசன் அவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *