May 1, 2024

படிப்படியாக மேலே வந்த நம்ம கவினா இது ..?? நடிக்க வருவதற்கு முன்பு இப்படி தான் இருந்தாரா ..?? வெளிவந்த பழைய புகைப்படங்கள் ..!!

சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்து வருபவர் நடிகர் கவின் . அந்த வகையில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் கவின்.  பின்னர் தாயுமானவன் ,

சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான கவினுக்கு நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்த வாய்ப்பு வந்தது.  ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  ஆனால் அதன் பிறகு,

இவர் நடித்த லிப்ட் மற்றும் டாடா போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் கவின் . இப்படி இருக்கும் நிலையில்,

படிப்படியாக மேலே வந்த கவின் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *