April 22, 2024

பிக்பாஸால் கிடைத்த அங்கீகாரம் ..!! கடை திறக்கும் அளவிற்கு பிரபலமான அர்ச்சனா ..!! இதை விட வேற என்ன வேண்டும் ..!!

அர்ச்சனா ரவிச்சந்திரன் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் விஜே வாக பணியாற்றி வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இப்படி இவர் நடித்த முதல் சீரியலே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தேன்மொழி பி ஏ ,இந்திரா போன்ற சீரியல்களில்,

நடித்திருந்தார் . இதை அடுத்து சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் அர்ச்சனா.  ஆரம்பத்தில் அழுமூஞ்சி என்று பெயரெடுத்த அர்ச்சனா போக போக சகப் போட்டியாளர்களை அலற வைத்தார்.  இதனால் கண்டிப்பாக இவர் தான் பிக் பாஸ் டைட்டில்,

வின்னர் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்கள் முன்கூட்டியே கணித்து விட்டனர்.  அப்படி அவர்கள் கணித்தது போலவே பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் அர்ச்சனா . இன்னும் சொல்லப்போனால் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றது,

இதுவே முதல் முறையாகும் .  இப்படி இருக்கும் நிலையில் ஒரு கடை திறக்கும் அளவிற்கு பெரிய பிரபலமாக மாறிவிட்டார் அர்ச்சனா . இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை வெறுப்பவர்களுக்கு இது சரியான பதிலடி என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *