May 7, 2024

” சிங்க பெண்மணி ” விசித்ராவை வரவேற்ற தோழிகள் ..!! வெளியே வந்ததும் சிறப்பாக நடந்த பார்ட்டி ..!! அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை விசித்ரா . கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போர் கொடி என்ற படத்தின்  மூலம் அறிமுகமானார் நடிகை விசித்ரா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தலைவாசல் என்ற படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தேவர் மகன், அமராவதி ,ரசிகன் ,அமைதிப்படை ,முத்து ,

வில்லாதி வில்லன் ,பெரிய குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை விசித்ரா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சாஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட விசித்ராவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  குறிப்பாக திருமணத்திற்கு பிறகு நடிப்பதையே நிறுத்திக் கொண்டார் விசித்ரா . இதை அடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆரம்பத்திலிருந்தே திறமையாக விளையாடி வந்தார் விசித்ரா . இன்னும் சொல்லப் போனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் ரசிகர்கள் கணித்து வைத்திருந்தனர்.  ஆனால் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிவிட்டார் விசித்ரா.

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவை அவருடைய தோழிகளும் , கணவரும் சிறப்பாக வரவேற்றுள்ளனர் . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *