April 28, 2024

வி ஜய் சிக ரெட் பிடித் தால் த ப்பு ..!! ஆ னா , அந் த நடி கை பிடித் தால் தப்பு இல்லை ..!! நல் லாயி ருக்கு யா உங் க நியா யம் ..!! சரமா ரியா க கேள்வி யெழு ப்பும் விஜ ய் ரசிக ர்க ள் ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ,சஞ்சய் தத் ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,பிரியா ஆனந்த் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்தின் முதல் பாடலான “நான் ரெடி வரவா” மீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்த படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கொண்டே நடனம் ஆடியதால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் . அவருக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வந்தனர் .  இப்படி நடிகர் விஜய் சிகரெட் பிடித்ததற்கே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு நடிகை சிகரெட் பிடித்ததை  யாருமே கண்டுகொள்ளாதது  தான் சோகமே.

அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா விஜயகுமார்  தான் . விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மலம் கதாநாயகியாக அறிமுகமான  நடிகை வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  குறிப்பாக வனிதா என்றால் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது கடைசி தோட்டா என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறாராம்,

நடிகை வனிதா விஜயகுமார்.  அந்த படத்திற்காக அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியிலும் நடித்திருக்கிறாராம் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *