April 29, 2024

வடிவேலு விஜயகாந்தை பார்க்க வந்தால் ..!! கண்டிப்பாக அவருக்கு அடி விழும்..!! பகீர் கிளப்பிய பிரபலம் ..!!

இன்று கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது . இதனால் அரசியல் பிரபலங்களும்,  திரை பிரபலங்களும், ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் வைகை புயல் வடிவேலு விஜயகாந்தை பார்க்க வருவாரா என்ற கேள்வி இருந்து வருகிறது . ஆனால் அவர் விஜயகாந்தை பார்க்க வந்தால் கண்டிப்பாக அவருக்கு அடி விழும் என்று ,

கூறியிருக்கிறார் பிரபலம் ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை பத்திரிக்கையாளர் அந்தணன் தான்.  அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தணன் கூறியதாவது , கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வடிவேலு வரமாட்டார் என்று தான் ,

எனக்கு தோன்றுகிறது . காரணம் என்னதான் ஆரம்பத்தில் விஜயகாந்த் உடன் வடிவேலு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் , ஒரு கட்டத்தில் விஜயகாந்தை மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார் . அதை இன்னும் ரசிகர்கள் யாருமே மறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்லாமல் விஜயகாந்தின் ரசிகர்கள் இன்று உச்சகட்ட கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர் . இந்த நேரத்தில் வடிவேலு அஞ்சலி செலுத்த வந்தால் கண்டிப்பாக அவருக்கு அடி விழுவது உறுதி . இதனால்தான் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டும் ,

இன்னும் வடிவேலு எதுவும் பேசாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  என்னதான் வடிவேலு தரை குறைவாக பேசி இருந்தாலும் அவரும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார் விஜயகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *