April 26, 2024

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால்..!! கண்டிப்பாக இதை செய்திருப்பார் ..!! நல்ல நண்பனை இழந்த சூப்பர் ஸ்டார் உருக்கம் ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திடீர் மரணம் பிரபலங்கள் உட்பட ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது . மேலும் அப்போதைய காலகட்டத்தில் கருப்பாக இருக்கும் நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக நடிக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்து வந்தது.  அதை எல்லாம் தகர்த்தெறிந்தவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .

மேலும் விஜயகாந்துக்கு முன்னரே ரஜினிகாந்த் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி விட்டார் . அப்படி இருந்தும் கூட விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது . ஆனால் அதையும் தாண்டி சினிமாவில் ,

ஜெயித்து காட்டி இருக்கிறார் விஜயகாந்த் . இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் , கேப்டன் விஜயகாந்த் அவர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.  ஆனால் இருவரும் ஒரு படத்தில் கூட இணையவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாக இருந்தது .

இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று நேரில் சென்று கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார் . அதோடு இவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால்,

தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். மேலும் தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணி இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள் என்றும் உருக்கமாக கூறியிருந்தார் ரஜினிகாந்த்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *