April 23, 2024

காதலனை கரம்பிடித்த அயலான் பட நடிகை ..!! பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கிவரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரகுல் பிரீத்தி சிங் . கன்னட படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ,

கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று ,தேவ் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அது மட்டுமல்லாமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில்,

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில்,

33 வயதான ரகுல் ப்ரீத்தி சிங் இன்று தன்னுடைய காதலனான ஜாக்கி பக்னானி என்பவரை கரம் பிடித்திருக்கிறார்.  அவருடைய திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்க் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *