April 28, 2024

அப் பா வின் தற் போ தைய நி லை இது தா ன் ..?? அதி ர்ச் சி தக வ லை கூறி ய விஜய காந் தின் மக ன் ..!! பிரா ர்த்த னை செ ய் யும் ரசி கர்க ள் ..!!

ஒரு காலகட்டத்தில் ரஜினி கமலுக்கே டப் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் செயல்பட்டு வந்தவர் விஜயகாந்த் அவர்கள்.  குறிப்பாக இவர் நிஜ வாழ்க்கையிலும் நடிக்க தெரியாதவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனாலேயே இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர் . மேலும் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஒரு கை பார்த்த விஜயகாந்து க்கு ,

சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது . இதனால் சினிமா மற்றும் அரசியல் என்று எதிலும் தலைகாட்டாமல்  வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவியும் , விஜயகாந்தின் மகன்களும்  தான் நிர்வாகித்து வருகின்றனர். அதோடு  அவருடைய மகன் அடுத்து  நடிக்கும்,

புதிய படத்தின் தலைப்பை வெளியிடுவதற்காக கேப்டன் வெளியே வருகிறார் என்றும் தகவல் வெளியானது . இ ப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் பூர்வீக ஊருக்கு வந்திருந்த மூத்த மகனான விஜய பிரபாகரனிடம் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி  உள்ளனர் .

அதற்குப் பதிலளித்த விஜய பிரபாகரன்கூறியதாவது ,  அப்பாவின் உடல் நலம் சற்று பின்னடைவு தான் . ஆனால் அவர் நன்றாகத் தான் இருக்கிறார்.அவர் பழையபடி பேச வேண்டும் நடக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.  சீக்கிரம் குணமடைவார் என்று உங்களைப் போலவே நாங்களும் ,

வேண்டுகிறோம் என்று கூறியிருந்தார் . தற்போது அவர் கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .மேலும் அவருடைய மகனே இப்படி கூறியதால் ரசிகர்கள் கேப்டன் விஜயகாந்த் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *