May 4, 2024

பல ரும் பார் த்தி டாத கா மெடி நடி கர் சந்தா னத் தின் குடும் ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

சந்தானம் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகர் சந்தானம்.  பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பேசாத கண்ணும் பேசுமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  இருந்தாலும் இவர் பிரபலமானது,

சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் தான்.  இந்தப் படத்திற்குப் பிறகு உனக்கும் எனக்கும், வல்லவன் ,அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் ,பில்லா, சந்தோஷ் சுப்பிரமணியம் ,சிவா மனசுல சக்தி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் சந்தானம் .

துவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகர்களான ரஜினி ,விஜய் ,அஜித், சூர்யா, விக்ரம் ,சிம்பு, தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகர் சந்தானம் . இப்படி காமெடியனாக கலக்கி கொண்டு வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார் .

அப்படி தொடக்கத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒரு அளவிற்கு வரவேற்பை பெற்றாலும் , சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . அப்படி இருந்தும் தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சந்தானம் .

இதனிடையே  கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சந்தானம்.  திருமணமான இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடா த நடிகர் சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *