April 22, 2024

அண்ணாச்சியின் அடுத்த படத்தை பார்க்க ரெடியா ..?? இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!! இவர் எப்படி ஒத்துக்கிட்டாரு ..??

சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிரம்மாண்ட கடையின் உரிமையாளர் தான் சரவணன் அருள் . ஆரம்பத்தில் தன்னுடைய கடையின் விளம்பரங்களில் நடித்து பிரபலமான சரவணன் கடந்த வருடம் வெளியான தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இப்படி வெளியான திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது . குறிப்பாக அண்ணாச்சியின் நடிப்பை பார்த்து ரசிகர்களே,

கழுவி கழுவிம் ஊற்றினார்கள் . இருந்தாலும் முயற்சியை விடாத அண்ணாச்சி அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் . அந்த படத்தின் இயக்குனர் வேறு யாருமில்லை இயக்குனர் துரை செந்தில்குமார் தான் . ஆரம்பத்தில் இயக்குனர் வெற்றிமாறனிடம்,

உதவி இயக்குனராக பணியாற்றி வந்த துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த துரை செந்தில்குமார் தொடர்ந்து ,

காக்கி சட்டை , தனுஷை வைத்து கொடி , பட்டாசு போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . இதை அடுத்து பல கதைகளை கேட்ட லெஜன்ட் அண்ணாச்சிக்கு இயக்குனர் துரை செந்தில்குமார் சொல்லிய கதை மிகவும் பிடித்துப் போனதாம். இதனால் இவரை விடக்கூடாது,

என்பதற்காக இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு நாலு மடங்கு சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறாராம் லெஜெண்ட் அண்ணாச்சி  . இதனால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *