May 3, 2024

9 வருட காதல் ..!! அட்லீயும் ,அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!! காதலுக்கு மனசு தான் முக்கியம் ..!!

அட்லீ தற்போது இந்திய அளவில் ஒரு பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த அட்லீ  பின்னர் இரண்டாவது படத்திலேயே விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் .

அந்த வகையில் இவர் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி ,மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதன் மூலம் இவருக்கு ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார் அட்லீ  . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு ,

நடிகை கிருஷ்ண பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் அட்லீ.   திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது . இப்படி இருக்கும் நிலையில் கல்யாணமாகி கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகியும் இருவருக்கும் இடையே ,

காதல் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் அட்லீயும் அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *