May 11, 2024

குத்துனா இப்படி குத்தனும் ..!! நடனத்தில் மாரி செல்வராஜையே ஓரங்கட்டிய பா ரஞ்சித் ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

பா ரஞ்சித் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த  பா ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த பா ரஞ்சித் பின்னர்  கார்த்தியை வைத்து மெட்ராஸ்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி , காலா , ஆர்யாவை வைத்து  சார்பட்டா பரம்பரை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.  இதைஅடுத்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான்  என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் .

இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது . மேலும் பா ரஞ்சித் சினிமாவை தாண்டி நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் . அந்த வகையில் மார்கழி மாதம் என்பதால் “மார்கழியில் மக்களிசை “என்ற இசை நிகழ்ச்சியை ,

நடத்தினார் இயக்குனர் பா ரஞ்சித் .  அப்படி கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெறித்தனமாக நடனமாடி இருந்தார் இயக்குனர் பா ரஞ்சித் . மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வெறித்தனமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.

இதை அடுத்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் நடனத்தை பார்த்த ரசிகர்கள் என்னப்பா இவரு இந்த குத்து குத்துறாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *