May 1, 2024

13 வருடங்கள் கழித்து ..!! பாவனாவை சந்தித்த போது மன்னிப்பு கேட்ட அஜித் ..!! வைரலாகும் வீடியோ ..!! என்னா மனுசன்யா ..!!

அஜித் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . தற்போது துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் அஜித் . இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் ,திரிஷா ,ரெஜினா போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர்.  தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு,

அஜர்பைஜானில் நடந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் 13 வருடங்கள் கழித்து நடிகை பாவனாவை நேரில் சந்தித்த அஜித் பார்த்த உடனே மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.  அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ,

திரைப்படம் தான் அசல்.  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை பாவனா நடித்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது பாவனாவை அஜித் சந்தித்திருக்கிறார் . அப்போது நீங்கள் இங்கு இருப்பது எனக்கு தெரியும்,

இருந்தாலும் உங்களை சந்திப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது , மன்னித்து விடுங்கள் என்று பாவனாவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அஜித் . அதற்கு பாவனா , நீங்க லேட்டா வர்றீங்கன்னு சொன்னதால தான் நானும் கொஞ்சம் லேட்டாக வந்தேன் என்று,

சிரித்துக் கொண்டே கூறியிருந்தார் . அது மட்டுமல்லாமல் 13 வருடங்கள் கழித்து அவரை சந்தித்தாலும் அவருடைய பண்பு இன்னும் மாறவில்லை என்று கூறியிருந்தார் நடிகை பாவனா . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *