April 26, 2024

கைவசம் ஒரு தொழில் இருக்கு ..!! ஆட்டோ ஒட்டுனராக மாறிய ” எதிர்நீச்சல் ” ஈஸ்வரி ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

கனிகா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார் . கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை கனிகா . இதுதான் இவருக்கு முதல் திரைப்படமாகும்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியான எதிரி, சேரன் நடிப்பில் வெளியான  ஆட்டோகிராப் , அஜித் நடிப்பில் வெளியான வரலாறு ,

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை கனிகா . மேலும் இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு வந்த நடிகை கனிகா ஒரு கட்டத்தில் சின்னத்திரையிலும் களமிறங்கினார்.  அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் ,

நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை கனிகா . இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா ,

“கைவசம் ஒரு தொழில் இருக்கு” என்ற கேப்சன் உடன் ஆட்டோ ஓட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *