April 28, 2024

செவ செவனு இருந்த அருண் விஜய்யா இது ..?? கருகருவென மாற்றிய இயக்குனர் பாலா ..!! வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ..!!

தமிழ் சினிமாவிலேயே தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான பரிமாணத்தில் எடுப்பவர் இயக்குனர் பாலா . அப்படி நடிக்க தெரியாதவர்கள் கூட இவருடைய படத்தில் நடித்தால் நல்ல  நடிகர் என்று பெயர் எடுத்து விடுவார்கள் . அந்த அளவிற்கு தன்னுடைய படத்தின் நடிக்கும் நடிகர்களை மாற்றி விடுவார் இயக்குனர் பாலா. இந் நிலையில் கடந்த வருடம்  நடிகர் சூர்யாவை வைத்து,

வணங்கான் என்ற படத்தை தொடங்கினார் இயக்குனர் பாலா.  அப்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இதன் பிறகு இந்த படத்தில் ஹீரோவாக  நடிகர் அருண் விஜய் கமிட்டானார் .

இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின் , சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் . கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகியும் இந்த படத்தின் அப்டேட் வெளியாகாமல் ,

இருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் அருண் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில்  வெளியிட்டுள்ளார் .  அந்த போஸ்டரில்  செவ செவனு இருந்த அருண் விஜய்யை  கருகருவென மாற்றி இருக்கிறார் இயக்குனர் பாலா.  இதனால் கண்டிப்பாக ,

இந்த படத்தில் அருண் விஜயின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்று போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது . இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை  நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *