May 1, 2024

எங்க வீட்டு குட்டி இளவரசி ..!! முதல் முறையாக மகளின் புகைப்படங்களை வெளியிட்ட அசின் ..!! குவியும் லைக்ஸ் ..!!

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அசின்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அசின் கடந்த 2௦௦4 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி வெளியான இவருடைய முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கஜினி, சிவகாசி ,வரலாறு, போக்கிரி ,வேல் ,தசாவதாரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை அசின் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . கடைசியாக இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் நடித்திருந்தார் . இதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராகுல் சர்மா என்பவரை ,

திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு அரின் என்ற மகளும் இருக்கிறார்.  இந்நிலையில் ஆறு வயதான மகளின் புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை அசின்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *