April 24, 2024

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய ..!! சதீஷின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

சதீஷ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் கிரேசி மோகன் நாடகக்குழுவில் பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மெரினா படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் இவருடைய காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் , நய்யாண்டி , மான் கராத்தே, கத்தி ,ஆம்பள ,தங்க மகன் போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சதீஷ் . இப்படி காமெடியனாக கலக்கிக் கொண்டு வந்த சதீஷ் கடந்த வருடம் ,

வெளியான நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இதன் பிறகு ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த சதீஷ் தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் சதீஷ் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சதீஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *