April 22, 2024

தமிழ் சினிமாவிற்கு இன்னொரு கதாநாயகி ரெடி ..!! நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் தேவதர்ஷினியின் மகள் ..!! இவங்க பொண்ணா இது ..??

தேவதர்ஷினி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகை மற்றும் குணச்சித்திர நடிகை ஆவார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார் நடிகை தேவதர்ஷினி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காக்க காக்க ,சரவணா, தீபாவளி, பிரிவோம் சந்திப்போம் ,எந்திரன், காஞ்சனா, தீயா வேலை செய்யணும் குமாரு ,

வீரம் 36 வயதினிலே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ,

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவதர்ஷினி. திருமணமான இவர்களுக்கு நியத்தி கடம்பி என்ற மகள் இருக்கிறார்.  இவர் விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் சிறு வயது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில்,

நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் கதாநாயகி போல நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறார் நடிகை தேவதர்ஷினியின் மகள் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ,

தமிழ் சினிமாவிற்கு அடுத்த கதாநாயகி ரெடி என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *