April 30, 2024

19 வயது நடிகைக்கு கொக்கி போட்ட தனுஷ்..!! ஆனால் இவருக்காக இல்லையாம் ..!! அப்ப அடுத்த சம்பவம் உறுதி ..!!

தற்போது தமிழ் திரையுலகில்  ஓர் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ் . துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம்  தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய தனுஷ் முதல் படத்திலேயே பல விமர்சனங்களுக்கு ஆளானார் . இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பை மெருகேற்றி  இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மேலும் தனுஷ் நல்ல நடிகர் என்பதை தாண்டி இயக்குனர் ,பாடகர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . அப்படி ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து  பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்த தனுஷ் தற்போது தன்னுடைய ,

ஐம்பதாவது படத்தை இயக்கி முடித்துள்ளார் . இதைத்தொடர்ந்து மூன்றாவது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறாராம் தனுஷ் . இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் . அதோடு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் ,

நடிக்க உள்ளாராம் . அதற்காக 19 வயது நடிகைக்கு கொக்கி போட்டு உள்ளாராம் தனுஷ்.  அவர் வேறு யாரும் இல்லை என்னை அறிந்தால் ,விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தான்.  இவர்தான் இந்த படத்தில்,

தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *